search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யார் முதலமைச்சர்"

    தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது.

    தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக யார் வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோருக்கு 25 சதவீத மக்களும், டிடிவி தினகரன், ரஜினி ஆகியோருக்கு தலா 6 சதவீத மக்களும், கமலுக்கு 5 சதவீத மக்களும், அன்புமணிக்கு 4 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 3 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



    மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, ஆம் என 8 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு அருமை என 10 சதவீத மக்களும், நன்று என 11 சதவீத மக்களும், சராசரி என்று 28 சதவீத மக்களும், சரியில்லை என 35 சதவீத மக்களும், மோசம் என 16 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். #ThanthiTV #ThanthiTVOpinionPoll
    ×